Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகன உதிரிபாக கடையில் பற்றிய தீ…7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…!!!

மோட்டார் வாகன உதிரிபாக கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் மேல்செங்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் போச்சாம்பள்ளியில் உள்ள திருப்பத்தூர் ரோட்டின் அருகில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்த கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் கேன்கள் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து பன்னீர்செல்வம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் கடையில் இருந்த ரூ 7 லட்சம் மதிப்பிலான டயர்கள், உதிரிபாகங்கள், ஆயில் கேன்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து போச்சம்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |