ஒடிசா மாநிலத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒடிசா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் கட்டாயம் மூன்று மாதங்களுக்கு அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இங்கு நடக்கும் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் தான் ஏற்படுகிறது. அதனைத் தடுப்பதற்கு கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்