Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை… மீறினால் அபராதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

 புதுச்சேரியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் தான் நடக்கின்றன. அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என போக்குவரத்துத் துறைச் செயலாளர் அசோக்குமார் எச்சரித்துள்ளார்.

மேலும் காரில் சீட் பெல்ட் அணியாததற்கு ரூ.1000, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய், உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம், சிக்னல் ஜம்பிங் ரூ.1000 அபராதம் அல்லது ஓராண்டுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதனால் இனி வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த விதி முறைகளைப் பின்பற்றிதான் வாகனங்களை ஓட்ட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |