Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி… கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நம் நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறல்களை மீறி செயல்படுவதால் தான் நடக்கின்றன. அதனைத் தடுக்க பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந் நிலையில் போக்குவரத்து விதிகள் மீறலுடன், வாகன காப்பீட்டு இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்கு அபராதம் செலுத்த நேர்ந்தால், அவை குறித்த தகவல்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு வாகனத்திற்கான காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படும்.

அதிக விதி மீறலில் ஈடுபட்டால் காப்பீட்டு கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பழைய விதிமுறை மீறல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இனிமேல் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் போக்குவரத்து விதி மீறல்களை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

Categories

Tech |