தற்போது நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டாக் கட்டண முறை விரைவில் நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதால் தாமதம், சில்லரை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும். இது பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் பல வாகனங்கள் ஃபாஸ்டாக் கட்டண முறைக்கு மாறாமல் உள்ளன. இதேபோல் ஃபாஸ்டாக்கை ரீசார்ஜ் செய்யாமலும், பயன்படுத்தாமலும் விட்டுள்ளனர்.
இதனால் சுங்க சாவடிகளில் பிரச்சனை ஏற்படுகின்றது. ஃபாஸ்டாக் கட்டண முறையில் உள்ள மற்றொரு பிரச்சினை என்னவென்றால் வாகனங்கள் குறைந்த தூரம் சென்றாலும் முழு கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளது. அதாவது நீங்கள் ஒரு சுங்கச்சாவடியை சென்றவுடன் நீங்கள் சொல்லும் இடம் வந்து விட்டாலோ அல்லது வேறு பாதையில் பிரிந்து செல்ல வேண்டியிருந்தாலும் அடுத்து சுங்கச்சாவடி வரை முழு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. வாகனங்கள் எவ்வளவு தூரம் கடந்துள்ளன என்பதை கணக்கிட்டு அதுவரைக்குமான கட்டணத்தை மட்டும் வசூலிக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே தற்போதுள்ள ஃபாஸ்டாக் கட்டண முறை விரைவில் நீக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சோதனை ஓட்டம் தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.