மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சமீமகாலமாகவே பெட்ரோல்-டீசல் விலை கடும் உயர்வை சந்தித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சற்று குறைந்துள்ளது நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் உணவுப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீடு தேடி வருவது போல இனி பெட்ரோல் டீசல் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.மும்பையை சேர்ந்த நிறுவனம் ரூபாய் 2000 கோடி முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான செயலிகள் தயாராகி வருவதாகவும், முதற் கட்டமாக சென்னை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா நகரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.