Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…. இனி இப்படி நிறுத்த கூடாது…. சென்னை மாநகராட்சி திடீர் எச்சரிக்கை…..!!!!

சென்னையில் பெருநகர மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது .அதன்படி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்து வது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 80 வாகன நிறுத்த இடங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாநகராட்சியின் இணைய இணைப்பின் மூலமாக வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் சமீப காலமாக வாகன நிறுத்த இடங்களில் வாகன ஓட்டிகள் முறையான விதிகளை பின்பற்றாமல் இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |