Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளே!….. உங்கள் மன அழுத்தத்தை குறைக்க….. இனி சிக்னலில்…. வெளியான சூப்பர் திட்டம்….!!!

கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சக்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. அங்கு போக்குவரத்தை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சில சிக்னலில் வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை போக்குவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து போக்குவரத்து சிக்னலில் இன்னிசை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் கோவையில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சிக்னலில் ஒளிபரப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியது, அவிநாசி ரோட்டில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு, ஹாப் காலேஜ், சிங்காநல்லூர் ஆகிய சிக்னலில் இன்று முதல் இன்னிசை ஒளிபரப்பும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிக்னலில் சிவப்பு நிற விளக்கும ஒளிந்ததும், அங்குள்ள ஒளிபெருக்கில் இன்னிசை பாடல்கள் ஒலிக்கப்படும். மேலும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்களும் அவ்வப்போது ஒளிபரப்பு செய்யப்படும். இதனால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாது. அதனைப் போல மற்ற சிக்னலிலும் இன்னிசை ஒளிபரப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |