சென்னை மாநகரத்திற்கு போக்குவரத்து காவல் மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதனால் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் சென்றடையலாம்.
அதனைப் போல பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதும் இல்லாமல் வழக்கமான சாலையில் செல்லலாம். வடபழனியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தண்டுமா நகர் யூ வளைவு எடுத்து சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திருவிக தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம். மேலும் வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலையில் இடது புறமாக திரும்பி திருவிகா தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்று அடையலாம் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது.