Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! “நோ பார்க்கிங்”கில் இனி வண்டியை நிறுத்தினால்…. போக்குவரத்து துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் நோ பார்க்கிங் என்ற போர்டு வைக்கப்பட்ட போதிலும் அதில் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இவற்றை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் வாகன ஓட்டிகள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. இதனால் தமிழக போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக முதலில் வட சென்னை பகுதியில் முக்கிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவெற்றியூர் மண்டலத்தில் சட்டவிரோதமாக நோபார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டப்படும். முதல் முறை நோட்டீஸ் மட்டுமே ஓட்டப்படும் அபராதம் எதுவும் வசூல் செய்யப்படாது. மீண்டும் மீண்டும் அந்த வாகனம் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு அந்த வாகனம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு விதியை மீறி செயல்பட்டதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது சென்னையில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் வாகனத்தை நிறுத்துவதற்கு பார்க்கிங் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பான பார்க்கிங் பகுதிகள் சென்னையில் 88 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |