Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…! வரும் 28 ஆம் தேதி முதல்…. இதை செய்யாவிட்டால் ரூ.1000 அபராதம்….!!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், இதற்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் நூறு ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை 10 மடங்காக உயர்த்தி 1000 ரூபாய் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டால் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்பட உள்ளது.

Categories

Tech |