Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே….. சென்னையில் இன்று (ஜூன் 4) முதல் 10 நாட்களுக்கு…. போக்குவரத்து மாற்றம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன போக்குவரத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 10 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை -டேம்ஸ் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை -திருவிகா சந்திப்பு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து அண்ணா சாலை – ஸ்மித் ரோடு சந்திப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பத்து நாட்கள் இன்று முதல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம். அதனைப்போலவே டவர் கிளாக் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடைய அனுமதிக்கப்படுகிறது. இதையடுத்து ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுல்லாஸ் சாலையில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் ஸ்மித் சாலைக்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ஸ் துணிக்கடை எதிரே யூ டர்ன் செய்து ஸ்பென்சர் நோக்கி செல்லலாம் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |