Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…. சென்னையில் இனி “கியூ – ஆர்” கோடு மூலம் அபராதம்…. மாநகராட்சி புதிய அதிரடி….!!!!

சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இனிவரும் நாட்களில் qr கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய நடைமுறையை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை கலந்த 2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் கருவில் உடனடியாக அபரத்தை செலுத்தி விடுவார்கள்.

ஆனால் கார்டு இல்லாதவர்களை அரசு இ சேவை மற்றும் தபால் நிலையங்களுக்குச் சென்று அபராதத்தை செலுத்த போலீசார் கூறுகின்றனர். அதனால் சில வாகன ஓட்டிகள் பணம் செலுத்தாமல் செல்கின்றன. இவ்வாறு உள்ள வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை வசூல் செய்யும் நடவடிக்கையாக பறந்து போலீஸ் அழைப்பு மையங்கள் திறக்கப்பட்டன.

இவை மூலமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பேடிஎம் கியூ ஆர் கோடு மூலம் அபராதம் பெறும் வசதி சென்னை போக்குவரத்து போலீசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் வாகன ஓட்டிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |