Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே…! நாடு முழுவதும் இனி இது ஒரே மாதிரி தான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய உலகில் இப்போது போக்குவரத்து சேவை என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறி விட்டது. அதன்படி மக்கள் அனைவரும் தங்களது வேலைகளை எளிதாக முடிப்பதற்கு போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகமாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்ற சில வருடங்களாக மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.

இதனால் நெரிசல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசு ஒருசில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதை பின்பற்றாதவர்களுக்கு அவர்களின் போக்குவரத்து உரிமங்கள் ரத்துசெய்யப்படுகிறது. இதனை தவிர்த்து மக்கள் தங்களது வாகனங்களை பயன்படுத்தும்போது அரசின் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால் சாலைகளை விரிவாக்கும் பணிகளும் அரசின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வாகனங்களை இயக்குவதற்கு போக்குவரத்து கழகத்தின் வாயிலாக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உரிமமானது வழங்கப்படுகிறது. இதனை தவிர கனரக வாகனங்கள் பயன்படுத்துபவர்களுக்கு என தனி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர்உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை இணைக்க க்யூ ஆர் கோடு வசதியானது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

Categories

Tech |