Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளை உஷார்…. க்யூ ஆர் கோடு மூலம் அபராதம் வசூல்…. புதிய நடைமுறை…!!!!!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து கொண்டிருக்கிறது. டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் இ சலான் கருவியில் உடனடியாக அபராதத்தை செலுத்தி விடுகின்றார்கள். இந்த கார்டு  இல்லாதவர்கள் அரசு இ சேவை மையம், தபால் நிலையங்களுக்கு சென்று அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் தற்போது தப்பித்து விட்டோம் எதற்கு அபராதம் செலுத்த வேண்டும் எனும் மனநிலையில் வாகன ஓட்டிகள் மத்தியில் இருந்து வருகிறது. இவ்வாறு உள்ள வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை வசூல் செய்யும் நடவடிக்கையாக 12 போலீஸ் அழைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராத தொகையை வசூல் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் சாலையோர கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை செல்போன் செயலில் qr கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி இருப்பது போலவே போக்குவரத்து விதிமீறல் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பேடிஎம் கியூ ஆர் கோடு மூலமாக அபராதம் பெறும் வசதி சென்னை போக்குவரத்து போலீசில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த வசதியை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளுக்கு பணம் செலுத்தும் லிங்குடன் கூடிய எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். கியூ ஆர் கோடு மூலமாக அபராதம்  வசூல் செய்யும் நடைமுறை பற்றி போலீஸ் கமிஷனர் சங்கர் சிவால் நிருபர்களிடம் பேசிய போது இந்த வசதி மிகவும் எளிமையானது. இது பற்றி போக்குவரத்து போலீசாருக்கும் முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக உடனடியாக அபராத தொகை பெற முடியும் இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை அரசு கருவூலத்திற்கு நேரடியாக சென்று விடும் தற்போது 350 க்யூ ஆர் கோட் அட்டைகள் வந்திருக்கின்றது. முதற்கட்டமாக 300 போக்குவரத்து போலீசாருக்கு இந்த அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், துணை கமிஷனர் குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |