ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டணத்தைச் செலுத்துவதற்கான நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நேரத்துடன் எரிபொருள் செலவும் சேமிக்கப்படுகிறது. நான்கு வங்கிகளின் உதவியுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஸ்டேக் அறிமுகமானது. அதன்பிறகு 2017ம் ஆண்டு 7 லட்சம் பாஸ்டேக் வழங்கப்பட்டன. அதனையடுத்து 2018ஆம் ஆண்டு 34 லட்சமாக அதிகரித்தது. தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.