நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு 50 லிட்டர் வரை பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிற மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வு. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது 50 லிட்டர் வரை பெட்ரோல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்காக indIan oil credit card என்ற கார்டை எச்டிஎஃப்சி வங்கி வழங்குகிறது.
அதனைப் பெறுவதற்கு அடிப்படைத் தகுதி மாத ஊதியம் 12,000 ரூபாயாக இருக்க வேண்டும். மேலும் 21 முதல் 60 வயதுக்குள், சுயதொழில் செய்வோர் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தியன் ஆயில் கிரெடிட் கார்டை பெறுவதற்கு எச்டிஎஃப்சி வங்கியின் கிளை அல்லது வங்கி இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதுதவிர இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம். பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமல்லாமல் வணிக வளாகங்கள், ஷாப்பிங் மற்றும் பில் கட்டணம் ஆகியவற்றுக்கும் இந்தியன் ஆயில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.