Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வாகன ஓட்டிகள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்”… ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்திoல் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்  சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், கூடுதல் போலீஸ்  சூப்பிரண்டு  அண்ணாமலை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது. நமது மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க தடுப்பு தடைகள், வேகத்தடைகள், ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், தடுப்பு சுவர்கள் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் ஏராளமானோர் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றாமலும், தலை கவசம் அணியாமலும் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்தில் ஒருவர் இறந்தால். அவர்களது குடும்பம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் அனைவரும் விலை மதிப்பற்ற நம் உயிரை பாதுகாக்க சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் வசிக்கும் அனைவரும் விபத்துக்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |