Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… இன்று முதல் பிப்.,29 வரை அனைத்து நுகர்வோருக்கும் பாஸ்டேக் இலவசம்!

இன்று முதல் பிப்.,29 வரை அனைத்து நுகர்வோருக்கும் பாஸ்டேக் இலவசம் என நெடுச்சாலைத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதை தவிா்க்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த முறை கடந்த ஜன.,15ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டது. இதையடுத்து சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் பாஸ்டேக் மூலம் மட்டும் கடக்க அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் பிப்.,29ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பை வெளியிட்டது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி ரூ.100 மதிப்புள்ள ஃபாஸ்ட்டேக் கட்டணம் அடுத்த 15 நாட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் NHAI தங்கள் வாகனத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து நுகர்வோருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. அரசாங்கம் இல்லாமல் மற்ற தனிநபர் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்கிய அட்டைகளுக்கு இந்த சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் தகவல் பெற மை பாஸ்டேக் செயலி அல்லது 1033 எனும் எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |