Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….. இன்று முதல் 10 நாட்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெறும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இன்று முதல் பத்து நாட்களுக்கு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் அண்ணா ஆர்ச் பகுதி, ஈவேரா பெரியார் சாலை பகுதிகளில் வரும் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோயம்பேடு முதல் அமைந்தகரை பகுதி வரைக்கும் ஈவெரா நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இப்படி திருப்பி விடப்படும் வாகனங்கள் சுமார் 25 மீட்டர் இடைவெளி கொண்ட சுற்றுப்பாதையில் சென்று அமைந்தகரை பகுதியில் இணையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நெல்சன் மாணிக்கம் பகுதிக்கு செல்பவர்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலம் மூலம் கடந்து செல்லலாம். அமைந்தகரை பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல அதே வழியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |