Categories
தேசிய செய்திகள்

வரலாறு காணாத விலையுயர்வு…. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.254…. வாகன ஓட்டிகள் கடும் ஷாக்…!!!

ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் போரின் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது விலைவாசி புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 க்கு விற்பனையாகிறது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |