Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் அதிரடி…. 82 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய சோதனையில் 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு அருகில் கோவிலூர் ஈ.சி.ஆர் சாலை ரவுண்டானா பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அவ்வழியே  வேகமாக வந்த காரை மறித்து காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த காரில் மூன்று மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த  காவல்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்த காரில் வந்த ராஜா, செந்தில்நாதன், வீர கணேஷ்,  மகேஷ், பிரபாகரன் ஆகிய 5  பேரிடமும் தீவிர விசாரணை செய்துள்ளனர். இந்த  விசாரணையில் காரில் கொண்டு வந்த கஞ்சா 82 கிலோ இருக்கும் எனவும் அதன் மொத்த மதிப்பு ரூ 7 லட்சம் எனவும் கூறியுள்ளனர். அதன்பிறகு  இந்த கஞ்சாவை ஆந்திராவிலிருந்து திருவாரூர் மாவட்டம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதாகவும்  கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |