கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் அழகுநாதன்(42). தி.மு.க. பிரமுகரான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலத்திலிருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே உளுந்தூர்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சேர்ந்தநாடு குறுக்கு சாலை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி அழகுநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று ரிஷிவந்தியம் அடுத்த பல்லவாடி கிராமத்தில் வசித்து கஞ்சமலை மனைவி முத்தம்மாள்(73). இவர் திருக்கோவிலூர் எலவனாசூர்கோட்டை சாலையிலுள்ள பெத்தனார்கோவில் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கிக் கொண்ருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் முத்தம்மாள் மீது மோதிவிட்டது. இதனால் பலத்த காயமடைந்த முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.