ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய வாகன் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் வாகனம் மொத்தம் 3.14 லட்சம் வாகனங்களை ஜூலை மாதத்தில் விற்பனை செய்துள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளது. இது 2021 ஜூலை மாத விற்பனையை விட 13 சதவீதம் அதிகமாகும். இருசக்கர வாகனங்கள் பிரிவில் 14 சதவீத வளர்ச்சி ஏற்பட்டடுள்ளது.
2021 ஜூலை மாதத்தில் 2,62,728 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்நாட்டில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 169 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருட ஜூலை மாத விற்பனையை விட 15 சதவீதம் அதிகமாகும். மேலும் எலக்ட்ரிக் வாகன விற்பனையிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.