தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் வைபோகம் என்ற அழைப்பிதழ் வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி “வாக்களிக்கும் வைபோகம்” என ஈரோட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்பிதழ் வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஹாய் முதலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தும் சுற்றமும் நட்பும் சூழ வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.