தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 மணி வரை சராசரியாக 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகளில் 5.71%, நகராட்சிகளில் 10.32 சதவீதம், பேரூராட்சிகளில் 11.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மின்னணு இயந்திரங்களால் வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் கூடுதல் நேரம் வழங்கும் திட்டம் இல்லை. சென்னையில் மந்தமாக நடைபெற்று வாக்குப்பதிவு இனிமேல் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.