திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆட்டோக்களில் “ஸ்டிக்கர்”களை ஒட்டி மாவட்ட வருவாய் அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு தலைமை தாங்கியுள்ளார்.
அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதன்பின் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஓட்டினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.