Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு கூறிய பூத் ஏஜென்ட் வெளியேற்றம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்றச் கூறி பா.ஜ.க. பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்டை வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதனால் அல்-அமீன் பள்ளியில் இயங்கி வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

Categories

Tech |