Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் கவனத்திற்கு… வாக்குப்பதிவன்று இதற்கு அனுமதி இல்லை… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

வாக்குப்பதிவு மையங்களுக்குள் வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளன்று செல்போன்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதனரெட்டி தெரிவித்துள்ளார்.

தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 126 துணை மண்டல அலுவலர்கள், 126 மண்டல அலுவலர்கள் 1,679 வாக்குப்பதிவு மையங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 11 முதல் 17 வாக்கு பதிவு மையங்கள் வரை ஒவ்வொரு மண்டல அலுவலரும் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குபதிவு மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உட்பட வாக்குபதிவு நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று முதல் தேவையான அனைத்து பொருட்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு அதன்பின் அனைத்து மையங்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும். covid-19 காலத்தை கருத்தில் கொண்டு தற்போது தேர்தல் ஆணையம் 15 வகை உபகரணங்கள் சுகாதாரத் துறையின் மூலம் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் வழங்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு மையத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வாக்காளர்களுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குபதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருகை தரவேண்டும். அனைத்து வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் மாதிரி வாக்குப்பதிவு முறை நடத்தி உறுதிப்படுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கை விவரம் குறித்து மண்டல அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு தொடங்கியதும் தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி தகவல் தெரிவிக்க வேண்டும். மின்னணு எந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பழுது ஏற்படுவது கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக சரி செய்து வாக்கு பதிவுகளை தொடர வேண்டும். ஆனால் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்படுத்தக் கூடாது. அப்படி காலதாமதம் ஆனால் வாக்குப்பதிவு முடியும் நேரமும் காலதாமதமாகிவிடும்.

அந்த சூழ்நிலையை நாமே உருவாக்கி விடக்கூடாது. அலுவலர்கள் வாக்குபதிவு நடைபெறும் அரங்கில் பணிபுரியும்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வாக்கு பதிவு மையத்திற்கு வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் செல்போன் கொண்டு வருவதை அனுமதிக்கக்கூடாது. மேலும் கண் பார்வையற்றவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் அவர்களுடன் வாக்களிக்க வரும்போது உதவியாளர்களை அனுமதிக்கலாம். அப்போது அவர்களிடம் அதற்குரிய படிவத்தில் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிந்து (திருப்பத்தூர்), சுரேந்திரன் (காரைக்குடி), மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |