Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் சிரமத்தை குறைக்க… கூடுதல் சிறப்பு வசதிகள்… மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை உரிய வாக்குச்சாவடியில் பதிவு செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், செந்துறை, புதுக்கோட்டை ஜெயங்கொண்டம், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் வருகின்ற 4, 5-ம் தேதிகளில் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை திருச்சியிலிருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மதுரை ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட உள்ளது.

திருப்பூர், மதுரை கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தேர்தல் முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |