வாக்காளர்களின் தாகம் தீர்க்க வாக்குச்சாவடி மையங்களில் மண் பானைகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடுமையான அனல் காற்று வீசுவதால் தேர்தல் வாக்குபதிவு நேரத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது குடிப்பதற்காக குளுமையான தண்ணீர் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது.
இந்த மண் பானைகள் தொகுதி வாரியாக அனுப்பப்பட உள்ளது. இதில் 443 வாக்குச்சாவடி மையம் காரைக்குடி தொகுதியில் உள்ளதால் 500 மண்பானைகள் வரை அங்கு இறங்கியுள்ளது. அந்த மண் பானைகளில் தண்ணீர் பிடித்து குடிப்பதற்கு ஏதுவாக திருகு பொருத்தப்பட்டுள்ளது. அவை அனைத்தும் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்பானைகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் அனுப்பப்பட உள்ளது. தற்போது கோடை காலம் நிலவி வருவதால் வாக்காளர்களின் தாகம் தீர்க்க வாக்குச்சாவடி மையங்களில் இந்த மண் பானை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும்.