பாஜக இளம் வாக்காளர்கள் கவரக்கூடிய வகையில் ஒரு வித்தியாசமான வாக்குறுதியை அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என்று இளம் வாக்காளர்களை கவரக்கூடிய வகையில் பாஜக வித்தியாசமான வாக்குறுதியை அறிவித்துள்ளது.
தற்போது இந்த வாக்குறுதி பேசும் பொருளாக மாறியுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.