Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்… காரைக்குடியில் சிலம்பாட்ட விழிப்புணர்வு..!!

சிவகங்கை காரைக்குடியில் 100% வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 100% வாக்களிப்பது குறித்து சிலம்பாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலம்பாட்ட விழிப்புணர்வு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கழனிவாசல் சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கியுள்ளார். வருவாய் ஆய்வாளர் மெகர்அலி, மண்டல துணை தாசில்தார் மல்லிகார்ஜூன், கிராம நிர்வாக அலுவலர் அபிநயா ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகுத்துள்ளனர். நேதாஜி சிலம்பாட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் சிலம்பாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்துள்ளனர்.

Categories

Tech |