Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டை இல்லையா..? இப்படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த வாக்காளர்கள் இரண்டு நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்களது அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மதுசூதன் ரெட்டி இந்த ஆண்டு புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்கும் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையினை 13,14-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் e-EPIC செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வருகின்ற 13, 14-ஆம் தேதியில் கைபேசி எண்ணை கொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. எனவே புதிய வாக்காளர்கள் வாக்காளர் புகைப்பட அட்டையை மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |