Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?… சரி பார்ப்பது எப்படி?…!!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் மிகவும் எளிமையாக பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண்கள் 3,09,25,603 பேரும் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் 6,3855 பேரும் உள்ளனர்.

இன்று காலை 11 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அந்த பட்டியலை வெளியிட்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும் உங்கள் மாவட்டம் பற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள https://www.election.tn.gov.in/rollpdf/SSR202016112020.aspx என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தங்கள் பெயர் மற்றும் பிற பெயர் உள்ளதா என்று சரிபார்த்து பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள என்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே இந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆம் நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |