நீங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
எனவே நீங்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பினால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சமயத்தில் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் விடுபட்டுப் போக அதிகம் வாய்ப்பு உள்ளது. அதனால் உங்களின் பெயர் தேர்தலுக்கு முன் கூட்டியே வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பது மிக அவசியம். இதனை எளிதாக தெரிந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை செய்துள்ளது.
அதன்படி வீட்டில் இருந்தபடியே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை நீங்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம். லேப்டாப் அல்லது மொபைல் மூலமாக இதனை கண்டறியலாம். அதன்படி உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம் அல்லது இரண்டாவது வழிமுறையில் வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
EPIC எண் இல்லையெனில்,
Step 1 : தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP யின் https://electoralsearch.in/ எலக்ட்ரோல் தேடல் பக்கத்துக்குச் செல்லுங்கள் .
Step 2. அதில் Search Your Name in Election poll என்பதை கிளிக் செய்யவும். அல்லது அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் Captcha படத்தில் இருக்கும் குறியீட்டை உள்ளிடவும். இறுதியாக Enter பட்டனை தட்டவும்.
EPIC எண் இருந்தால்
Step 1 : Search by EPIC No என்பதை கிளிக் செய்யவும்.
Step 2 : உங்கள் EPIC எண்ணை உள்ளிட வேண்டும். அதற்கு கீழே உள்ள மெனுவில் இருந்து மாநிலத்தை தேர்வு செய்து, Captcha படத்தில் இருக்கும் குறியீட்டை உள்ளிடவும். பின்னர் தேடல் என்பதை கிளிக் செய்யவும்.
Step 3 : உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால், தேடல் பட்டனை கீழே காணலாம். எதுவும் தெரியவில்லை என்றால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அர்த்தம்.