தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்காக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இன்று தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்பட்டது.
புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் அவரவர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரை அணுக மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தபட்டுள்ளது.