Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!!!

கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் -நீக்கம், பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி மாற்றம், ஆதார் விவரங்களை இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மற்றும் சுய விவரங்கள் மாற்ற என ஒட்டுமொத்தமாக 23 லட்சத்து 3,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வருகிற ஜனவரி 3-ஆம் தேதி வரை  இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

Categories

Tech |