Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா…?? 4 நாட்கள் சிறப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களும், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் வகையில் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வேறு தொகுதிக்கு மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேற்கூறிய வசதிகளை பொதுமக்கள் வீட்டில் இருந்து கொண்டே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில் தேசிய வாக்காளர் சேவை இணையதளத்திற்கு சென்று Apply online/ Correction of entries என்ற லிங்க் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான சந்தேகங்களை 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |