தமிழகம் முழுவதும் இந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து கொள்ளலாம். 17 வயதுடைய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். அவர்கள் 18 வயதை அடைந்தபின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.