Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்த நடவடிக்‍கைகள் – சத்யபிரதா சாஹு

வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 16-ஆம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் குறித்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வரும் 21, 22 மற்றும் டிசம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனை நடத்துகிறார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Categories

Tech |