Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடிக்கு அருகே நடந்த சம்பவம்… கையும் களவுமாக பிடிபட்டவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அதிமுக கிளைச் செயலாளர் பெரியசாமி உட்பட நான்கு பேர் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள் 4 பேரையும் அரும்பாவூர் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதற்காக அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Categories

Tech |