தமிழகத்தில் தேர்தலையொட்டி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது.
அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக தேர்தலை யொட்டி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. விழுப்புரத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.