Categories
மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி அருகே…. அதிமுக பிரமுகரை குத்திய திமுக நிர்வாகி…. வேலூரில் பரபரப்பு…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வேலூர் வாணியம்பாடி ஆகிய பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சியில் தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடி அருகே அதிமுக பிரமுகர் வெங்கடேஷ் மற்றும் திமுக பிரமுகர் கண்ணபிரான் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அதிமுக பிரமுகர் வெங்கடேஷை திமுகவை சேர்ந்த  கண்ணபிரான் குடி போதையில் கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கண்ணபிரான் மற்றும் வெங்கடேஷிற்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் அது தற்போது தேர்தல் பிரச்சினையாக மாறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் வேலூர் பகுதியில் நடந்த சம்பவமானது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Categories

Tech |