Categories
தேசிய செய்திகள்

‘வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ – சுனில் அரோரா

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ்வின் கருத்தரங்கில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய அவர், தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி குறியீடு குறித்து எதிர்வரும் நாள்களில் ஆலோசனையில் ஈடுபடும் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவோ, தகவல்களை மாற்றியமைக்கவோ முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், மீண்டும் பழைய (வாக்குச்சீட்டு) முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை. உயர் நீதிமன்றமே இயந்திரத்தை பயன்படுத்த சம்மதித்துள்ளன” எனக் கூறினார்.

Categories

Tech |