9 மாவட்டங்களுக்கான ஒன்றாக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் நிலவினாலும், ஒரு சில இடஙக்ளில் பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில் அயப்பன்தாங்கலில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள ஓட்டாக ஏற்கனவே பதிவாகி இருந்ததாக கமலஹாசன் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மையம் வேட்பாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் போராட்டத்திற்கு பிறகே ஸ்ரீதேவிக்கு சேலஞ்ச் ஓட்டளிக்க வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன் “வாக்கு சுத்தம் சொல்லிலும் இல்லை, செயலிலும் இல்லை” என்று விமர்சித்துள்ளார்.