தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் சென்னையில் நேற்று வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. இதனால் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தலைநகர் சென்னை பின்தங்கியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் 53.67% வாக்கு பதிவாகி இருந்த நிலையில் 2022-ஆம் ஆண்டில் 43.65% மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.