Categories
மாநில செய்திகள்

வாக்குப்பதிவு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு…. காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு எண்ணும் 15 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு எண்ணும் மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படும் என்று கூறினார். தற்போது காவலர்கள் தபால் ஓட்டு செலுத்தியுள்ளனர் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Categories

Tech |