சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தான் அளித்த ரகசிய வாக்கு மூலத்தில் நகலை கேட்டு ஸ்வப்னாசுரேஷ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன் வழங்கபட்ட போதும் NIA வழக்கில் ஜாமன் வழங்கப்படாததால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் சுங்க அதிகாரிகள் விசாரணையில் தான் அளித்த ரகசிய வாக்கு மூலத்தின் நகலை வழங்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.