Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்…. அரசு பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒட்டி சென்ற டிரைவர்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து குமுளி- திண்டுக்கல் இடையே அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை முருகேசன் என்பவர் குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்தை இயக்கி சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் முருகேசன் அரசு பேருந்தை நேராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து சேதமடைந்த பேருந்தை இயக்குவதால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகளை சந்தித்து பேருந்தின் நிலைமை குறித்து முறையிட்டார். இதுகுறித்து முருகேசன் கூறியதாவது, அரசு பேருந்தின் பக்கவாட்டுப்பகுதி, மேற்கூரை, முகப்பு கண்ணாடி, டிரைவர் இருக்கை, மீட்டர் போர்டு உள்ளிட்டவை சேதமடைந்து பேருந்தை இயக்கும் போது பயங்கரமாக சத்தம் கேட்கிறது. மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு, அரசுக்கும் கெட்ட பெயர் வந்துவிடும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |